திருவண்ணாமலை நகராட்சியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தூய்மை அருணை இயக்கம் சார்பில்  “மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாம்”  பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்து ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை, செப். 23 –

திருவண்ணாமலை நகராட்சியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தூய்மை அருணை இயக்கம் சார்பில்; “மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாம்” நடைபெற்று வரும்  பணிகளை மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, அவர்கள் இன்ற (23.09.2021) துவக்கி வைத்து, ஆய்வு செய்தார்.
தற்போது தமிழகம் எதிர்நோக்கி உள்ள வடகிழக்கு பருவமழையினால் குடியிருப்பு பகுதிகளில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் வெள்ள நீர்; புகும் அபாயம் உள்ளது. அதிகப்படியாக தேக்கமாகும் மழைநீரால் டெங்கு மற்றும் மலேரியா நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழ்நிலையும் உள்ளது. மேலும் மழைநீர்; சாக்கடையுடன் கலந்து தேங்குவதால் இதர தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. ஆகவே, எதிர்வரும் பருவமழையினால் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்த்திட ஏதுவாக 20.09.2021 முதல் 25.09.2021 வரை மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாமினை நடத்திட ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்களையும் 100 சதவீதம் தூர்வாரி தூய்மைப்படுத்த வேண்டும்.
இதனை தொடர்ந்து, பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்கள் திருவண்ணாமலை நகராட்சியில் வேட்டவலம் சாலை, கீழ்நாத்தூர், நாவக்கரை, பெருமாள் நகர், காந்திநகர் ஆகிய பகுதிகளில் திருவண்ணாமலை நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, தூய்மை அருணை இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாமினை துவக்கி வைத்து, ஆய்வு செய்தார்.
இவ்வாய்வின் போது, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் (திருவண்ணாமலை) சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர் (செங்கம்) மு.பெ.கிரி, முன்னாள் நகரமன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், நகராட்சி ஆணையர் (திருவண்ணாமலை) சந்திரா, வருவாய்த்துறை அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மற்றும் தூய்மை அருணை இயக்கத்தை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here