திருவள்ளூர், ஆக. 06 –

நேற்று திருவள்ளூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு அவ்வூரில் உள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் காப்புக்கட்டி விரதம் இருந்து ஸ்ரீ லட்சுமி அம்மன் கோவிலில் இருந்து, நடைப் பயணமாக பால்குடம் சுமந்து வந்து,  ஏரி கரையின் ஊர் எல்லையில் நின்று, அக்கிராமத்தைக் காக்கும் சப்த கன்னிகளுக்கு ஏழு வகையான சாதங்களை படையலிட்டு வழிபட்டனர்.

காட்டூர் பகுதியில் செய்யப்படும் விவசாயம் வானம் அளித்திடும் மழையை நம்பி இருப்பதால், மழை வேண்டியும் ஊர் அமைதி வேண்டியும், அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து அக்கிராம மக்கள் வழிபட்டனர்.

இந்நிகழ்வினைத் தொடர்ந்து, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இவ்விழாவில் காட்டூர் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பெண்கள் மற்றும் ஆண்கள் என திரளானவர்கள் குடும்பத்துடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here