நாகை, மார்ச். 24 –

திருவாரூரில் நடைபெற உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு வந்திருந்த வி.கே.சசிகலா  தனது உறவினர்களோடு சொகுசு விடுதியில் தங்கியிருந்தார். அப்போது ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான இருபதுக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் வி.கே.சசிகலாவைச் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

தொடர்ந்து அச்சந்திப்புக்கு பின்பு அங்கிருந்து திருவாரூர் புறப்பட்ட, சசிகலாவிடம் சட்டமன்றத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், சட்டமன்றம் மக்கள் பிரச்னைகளை பேசும் இடம். சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னைகளை மக்கள் பிரதிநிதிகள் தாராளமாக பேசலாம். அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பேசுவதற்கு உரிமை உள்ளது என அப்போது அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம் அதிமுக யார் கைக்கு சென்றால் நன்றாக இருக்கும் என மற்றொரு கேள்வியை எழுப்ப அதற்கு அவர் இதனை அதிமுக தொண்டர்களிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும் என்றவாறு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

சட்டமன்றத்தில் அதிமுக சார்பாக ஓ.பன்னீர்செல்வம் பேசியதற்கு எடப்பாடி தரப்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நாகையில் ஓபிஎஸ் தரப்பினர் சசிகலாவை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கதென அதிமுக வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here