பொன்னேரி, ஜூன். 30 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட 379 பயனாளிகளுக்கு பசலி 1431 வருவாய் தீர்வாய்த்தின் பேரில் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு சிறப்பு ஜமாபந்தி துவங்கப்பட்டு இதில் நிலப் பட்டா,. உதவித் தொகைகள், வீட்டு மனை வேண்டிய மனுக்கள் மற்றும்  .விதவைச் சான்று உள்ளிட்ட 1110 மனுக்கள் பெறப்பட்டன.

இதில் உடனடியாக ஜமாபந்தியில் தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முதியோர் உதவித்தொகைக்காக 114 பேருக்கும், மாற்றுத்திறனாளி உதவிக்காக 24 பேருக்கும்,விதவைத் தொகைக்காக 60 பேருக்கும்,உட்பிரிவு பட்டா 31 பேருக்கும்,முழு புலம் பட்டா 74 பேருக்கும்,குடும்ப அட்டை 76 பேருக்கும் என மொத்தம் 379 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதனை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வழங்கினார். அவருடன் பொன்னேரி கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, பொன்னேரி வட்டாட்சியர் ரஜினிகாந்த், சிறப்பு தனி வட்டாட்சியர்கள் கார்த்திகேயன், கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் சித்ரா உள்ளிட்டோர் இதனை வழங்கினர். கூட்ட முடிவில் தேசிய கீதத்தை மிகவும் இசைநயத்தோடு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் பாடி அனைவரையும் உற்சாகப் படுத்தினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here