மஞ்சக்குடி, மார்ச். 02 –

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகாமையில் உள்ள மஞ்சக்குடி ஊராட்சிப் பகுதியில் தேசிய கால்நடை நோய்கள் தடுப்பு திட்டத்தின் கீழ் அப்பகுதி கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி போடும் மருத்துவ முகாம் நடைப்பெற்றது.

மேலும், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரிலும், மண்டல இணை இயக்குனர் மருத்துவர் ஹமீதுஅலி அறிவுறுத்தலின்படியும், மண்டல உதவி இயக்குனர்கள் மருத்துவர் சபாபதி, மருத்துவர் சுவாமிநாதன் ஆகியோர் வழிகாட்டுதலின் படியும் இம்மருத்துவ முகாம் திருவாரூர் மாவட்டத்தில் மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை கால்நடை மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

மேலும் இக் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாமின் மூலம், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு லட்சத்து 90 ஆயிரம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணியானது நடைபெற உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, இன்று திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள மஞ்சக்குடி கிராமத்தில் நேற்றும் இன்றும் சுமார் 300 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணியானது நடைபெற்றது.

இம் மருத்துவ முகாமில், பெரும்பண்ணையூர் கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர் தீபன், கால்நடை ஆய்வாளர் முருகுபாண்டியன், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் முருகேசன் மற்றும் அனிதா  ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தினார்கள். தொடர்ந்து தடுப்பூசி போடபட்ட கால்நடைகளுக்கு அவற்றை அடையாளம் காண காதில் அடையாள வில்லை பொறுத்தப்பட்டது.

மேலும் இம்முகாம் தொடர்ந்து எதிர் வருகின்ற மார்ச் 21 ஆம் தேதி 2023 வரை இம்மாவட்டம் முழுவதும் நடைபெறுவதால் அனைத்து கிராமங்களிலும் உள்ள பொதுமக்கள் தங்கள்  கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டு  பயன் பெறுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கால்நடை வளர்ப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here