திருவண்ணாமலை ஜூலை.18- திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை விடிய விடிய கனமழை பெய்தது. செய்யாறு கலசபாக்கம் ஆரணி சேத்துப்பட்டு போளூர் ஆகிய பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியது. திருவண்ணாமலையில் நேற்று காலையும் சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக செய்யாறில் 78 மி.மீ. மழை பதிவானது. மற்ற இடங்களில் பதிவான மழையளவு (மில்லிமீட்டரில்) ஆரணி 33, செங்கம் 7.40, ஜமுனாமரத்தூர் 26, வந்தவாசி 22, போளூர் 36.20, திருவண்ணாமலை 9, தண்டராம்பட்டு 5, கலசபாக்கம் 67.60, சேத்துப்பட்டு 37.60, கீழ்பென்னாத்தூர் 20.60, வெம்பாக்கம் 18 மொத்த மழையளவு 360.40 சராசரி 30.3