கும்பகோணம், டிச. 27 –

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சுவாமி மலையில் ஸ்ரீ சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக் குழுவினர் சார்பில் மார்கழி மாத பௌர்ணமி கிரிவலம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் சென்றனர்.

சுவாமிமலையில் மாதம் தோறும் பௌர்ணமி கிரிவலம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல சுவாமிமலை சுவாமிநாத சுவாமி வழிபாட்டு குழுவினர் சார்பில் இம்மாத மார்கழி பௌர்ணமி கிரிவலம் காஞ்சிபுரம் எஸ் எம் சில்க்ஸ் உரிமையாளர் மனோகரன் தலைமையில்  ஸ்ரீ வல்லப கணபதி சன்னதியில் இருந்து புறப்பட்டு நான்கு வீதி வழியாக நூற்றுக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

அதில் 69 சாத்தனூர் சித்தர் திருமூலர் ஆயுள் தெண்டர் சந்திரசேகரன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிரிவலத்தை துவக்கி வைத்தார். ஸ்ரீ சுவாமிநாத சுவாமி வழிபாட்டு குழுவின் நிறுவனர் கேசவ ராஜன், தலைவர் சிவசங்கரன், செயலாளர் சேகர், பொருளாளர் சுவாமிநாதன், மற்றும் அறங்காவலர்கள் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கிரிவலம் சென்று வந்த பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவை நிறைந்த உணவு பிரசாதமாக வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here