ஆவடி, ஜூன். 01

சென்னை அடுத்த ஆவடி அருகே  ஜேபி எஸ்டேட்  20 வது  தெருவில் வசித்து வருபவர் வடிவேல் வயது 55 இவரது மனைவியுடன் சொந்த ஊர் செல்வதற்காக சென்னை  கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்தில் ஏறி அமர்ந்துள்ளனர்.

அப்போது அவர்கள் கொண்டு வந்த கைப்பையை அப்பேருந்தில் வைத்து விட்டு தண்ணீர் பாட்டில் வாங்க வடிவேல் சென்றுள்ளார். பின்னர்  தண்ணீர் பாட்டில் வாங்கி விட்டு பேருந்தில் ஏறிப்பார்த்த போது, அக் கைப் பை அவ்விடத்தில் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும் அப் பையில் வடிவேல் 14 சவரன் தங்க நகைகளை அதில் வைத்திருந்ததாகவும், இந்நிலையில் அப் பை காணது போனதாக அவர் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் அது தொடர்பாக வடிவேலு உடனடியாக கோயம்பேடு பேருந்து  நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துள்ள குற்றப்பிரிவு போலீசார் அப்பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது தங்க நகைகள் வைத்திருந்த பையை திருடி சென்ற நபரைக் கண்டறிந்துள்ளனர்.

மேலும், அந்நபர் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் பெயர் சுந்தரலிங்கம் வயது 46 என்பதும், தேவகோட்டையைச்  சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது

குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து வடிவேல் தவற விட்ட 14 சவரன் தங்க நகைகளை பையுடன் மீட்டனர். மேலும் குற்றப்பிரிவு போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், ஏற்கனவே சுந்தரலிங்கம் மீது சிவகங்கை மாவட்ட காவல் நிலையத்தில் ஒரு அடிதடி வழக்கு உள்ளது என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதனைத்தொடர்ந்து, சுந்தரலிங்கத்தை குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here