ராமநாதபுரம், ஆக. 13-ராமநாதபுரம் சுகம் வைத்தியசாலை மற்றும் ஆர்.கே. ஆயுர்தம் இயற்கையான பாரம்பரிய மற்று மூலிகை புத்துணர்ச்சி மையம் நடத்தி வரும் டாக்டர் காளிமுத்துவின் மருத்துவ சேவையை பாராட்டி அவருக்கு மாலத் தீவில் நடந்த விழாவில் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கப் பட்டுள்ளார்.
ராமநாதபுரத்தை சேர்ந்த டாக்டர் காளிமுத்து இயற்கை முறை விவசாயத்தில் தீவிர கவனம் செலுத்தி இயற்கை விவசாயம் செய்து வருகிறார். மேலும் இவர் பட்டணம்காத்தான் பகுதியில் சுகம் வைத்தியசாலை நடத்தி வருகிறார். இங்கு இயற்கையான ஆயுர்வேத சிகிச்சை மூலம் பலருக்கு தீராத நோய்களை குணப்படுத்தி பல்வேறு அரிய சாதனைகளை செய்து வந்துள்ளார். இவரிடம் சிகிச்சை பெற்ற பலரும் இவரை மனதார பாராட்டி சென்றுள்ளனர். டாக்டர் காளிமுத்து பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் ஆர்.கே. ஆயுர்தம் என்ற பாரம்பரிய மற்றும் மூலிகை புத்துணர்ச்சி மையத்தையும் நடத்தி வருகிறார். இங்கு இயற்கை முறையிலான மண் குளியல், வாழை இலை குளியல், யோகா, நீராவி குளியல், நல்லெண்ணெய் குளியல் போன்ற இயற்கை முறையிலான குளியல் புத்துணர்ச்சி மையத்தின் மூலம் இயற்கையோடு இணைந்து வாழ்வோம் என்பதை மக்களிடம் அவ்வப் போது வலியுறுத்தியும் வருகிறார். அடிக்கடி இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் நடத்தி மக்களுக்கு இலவச சிகிச்சை வழங்கி வருகிறார்.  இவரது மருத்துவ சேவையை  மாலத்தீவில் உள்ள சார்க் நாடுகளைச் சேர்ந்த  இண்டர்நேஷனல் பொருளாதார பல்கலைக்கழகம் பாராட்டியுள்ளது. மேலும் அங்கு நடந்த பட்டமளிப்பு விழாவில் இராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் சுகம் ஆயுர்வேத மருத்துவமனை டாக்டர் காளிமுத்து அவர்களுக்கு அவர் ஆற்றிய இயற்கை முறையிலான சிறந்த ஆயுர் வேத மருத்துவ சிகிச்சை முறையை பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி அவரை கவுரவப் படுத்தியுள்ளது. டாக்டர் பட்டம் பெற்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்த டாக்டர் காளிமுத்துவிற்கு ராமநாதபுரம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் அவருக்கு வாழ்த்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here