கும்பகோணம், ஆக. 27 –

கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா, மகாராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட அய்யாநல்லூர் கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீமாணிக்க நாச்சியார் அம்பாள், ஸ்ப்த கன்னிகள், நாகாத்தம்மாள், மற்றும் கருப்புசாமி தெய்வங்கள் தனித்தனி சன்னதிகள் கொண்ட அவ்வாலயத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு, கும்பாபிஷேக திருப்பணிகள் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நடைப்பெற்ற நிறைவு பெற்றதை தொடர்ந்து, கடந்த 25 ஆம் தேதி யாகசாலை பூஜை, கணபதி ஹோம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜை ஆகியவற்றுடன் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி, இன்று காலை 4ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று, மகா பூர்ணாஹ_தி சமர்பிக்கப்பட்டு, மகா தீபாராதனையும் செய்யப்பட்டது.

தொடர்ந்து, நாதஸ்வர, மேள, தாள, மங்கள வாத்தியங்கள் முழங்க, புனிதநீர் நிரப்பிய கடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு, ஏகாதசி திதி, புரட்டாதி நட்சத்திரம், துலா லக்னத்தில், சிவாச்சாரியார்கள் புனிதநீரை கோபுர கலசத்தில் ஊற்ற, மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதில் ஏராளமான உள்ளூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வந்த மக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர். மேலும் இச்சிறப்பு மிகு விழாவிற்கான அனைத்துவித நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய நாட்டாண்மைகள் பஞ்சாயர்த்துக்கள் கிராமவாசிகள் வெகுச் சிறப்பாக செய்திருந்தனர். தொடர்ந்து இன்றிரவு வாண வேடிக்கையுடன் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here