கும்பகோணம், ஏப். 10 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, இந்து மதத்தில் ஆறு வழிபாட்டு முறைகள் உள்ளதெனவும், அதில் சக்தி (சக்கரம் ) வழிபாடு மிகச் சிறப்பான இடத்தை வலங்கைமானில் உள்ள இத்திருத்தலம் பெற்றுள்ளதாக இந்து மத நம்பிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இவ்வுலகத்தில் அம்பிகை பராசக்தியாகவும் மேலும் பல்வேறு சக்திகளாக தோன்றி உயிர்களை செம்மையாக இயக்கி வருகிறாள் என இந்து மத வழிபாடு மேற்கொள்பவர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
மேலும் தன்னை பக்தியோடு வழிபடும் பக்தர்களுக்கு விரும்பிய வண்ணம் விரும்பிய வடிவுடன் ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ வீரன் ஸ்ரீ பேச்சாயியம்மனாக, அருள்பாலிக்கிறார். இத்தகைய பிரசித்தி பெற்ற சக்தி ஆலயத்தில், புதிதாக ரூ 16 லட்சம் மதிப்பீட்டில் ஆலயம் கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, நேற்று முன்தினம் 8 ஆம் தேதி யாகசாலை பூஜை கணபதி ஹோம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜை ஆகியவற்றுடன் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி, அதனைத்தொடர்ந்து, நேற்று காலை 3 ஆம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று, மகா பூர்ணாஹ_தி சமர்பிக்கப்பட்டு, மகா தீபாராதனையும் செய்யப்பட்டது.
தொடர்ந்து, நாதஸ்வர, மேள, தாள, மங்கள வாத்தியங்கள் முழங்க, புனிதநீர் நிரப்பிய கடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு, பஞ்சமி திதி, கேட்டை நட்சத்திரம், துலா லக்னத்தில், புனிதநீரை கோபுர கலசத்தில் ஊற்ற, மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது, இதில் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.