திருவண்ணாமலை, ஏப். 08 –

திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் வட்டம் காட்டுமலையனூர் கிராமத்தில் வசித்து வரும் நாராயணசாமி என்பவரின் மகன் பெருமாள் தனது நிலத்தில் விளைந்த 119, 40 கிலோ எடையுள்ள மூட்டை நெல்லினை ராஜதாங்கல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக கடந்த 2 ஆம் தேதி வந்துள்ளார். அந்நிலையத்தில் பட்டியல் எழுத்தராக பணிபுரியும் ஏழுமலை என்பவர் அவரிடம் மூட்டைக்கு ரூ. 40 வீதம் 119 மூட்டைக்கு ரூ. 4760 லஞ்சமாக கேட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து பெருமாள் கடன் வாங்கி விவசாயம் செய்துள்ளேன் அதனால் அவ்வளவு பணம் தன்னால் கொடுக்க இயலாது எனக்கூறிவுள்ளார். இந்நிலையில் அவரிடம் இருந்து 119 மூட்டை நெல் மூட்டைகளைப் பெற்றுக்கொண்டு அதற்கான தொகையை பெருமாளின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதாக கூறி அவரிடம் சிலீப் ஒன்றை தந்துள்ளார். ஏழுமலை, மேலும் அவர் அச்சீட்டைக் கொடுக்கும் போது தனக்கு ரூ. 4760 பணம் லஞ்சமாக கொடுத்தால் மட்டுமே வங்கிக் கணக்கில் ரூ. 95,919 பணம் வரவு வைக்கப்படும் என்றவாறும் பெருமாளிடம் நினைவுப் படுத்தி அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில், மீண்டும் கடந்த ஏப் 4 ஆம் தேதியன்று ராஜதாங்கல் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்திற்கு சென்று ஏழுமலையை சந்தித்து நான் தற்போது கொஞ்சம் சிரமத்தில் இருப்பதாகவும் அதனால் தாங்கள் எனது வங்கி கணக்கில் எப்போது பணத்தை வரவு செய்வீர்கள் என வினாவியுள்ளார். அப்போதும் ஏழுமலை பெருமாளிடம் நான் ஏற்கனவே கூறியதுதான் பணம் தந்தால் மட்டுமே வங்கிக் கணக்கில் வரவு வைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து வீடு திரும்பிய பெருமாளுக்கு அன்று மாலை போன் செய்து நீ கஷ்டத்தில் இருப்பதால், ஒரு மூட்டைக்கு ரூ.30 வீதம் 119 மூட்டைகளுக்கு ரூ. 3570 தரும்படி கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க மனமில்லாத பெருமாள் திருவண்ணாமலை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலகத்தில் இது குறித்து புகார் தெரிவித்துள்ளார்.

அப்புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலர்கள் கடந்த 6 ஆம் தேதி வழக்கு பதிவு செய்து ஏழுமலையை பொறிவைத்து பிடிக்கும் பணியில் ஈடுப்பட்டு பெருமாளிடம் இருந்து லஞ்சப்பணம் ரூ. 3570 ஏழுமலை பெறும் போது கைது செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here