கும்பகோணம், ஜன. 12 –

தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, சட்டீஸ்கர் மாநிலங்களை போல, மத்திய அரசும், வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்ய வலியுறுத்தி, கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஏராளமான விவசாயிகள் திரண்டு, 11 சிதறு தேங்காய் உடைத்தும், மகாத்மா காந்தியிடம் மனு அளித்தும், தேசிய கொடி ஏந்தி நூதன கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்றும் கூட,  இந்திய மக்கள் தொகையில், 69 சதவீத மக்கள் உழவர்களாக இருந்த போதும், மத்திய அரசு, வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை இதுவரை தாக்கல் முன்வரவில்லை, மாநிலங்களை பொறுத்தவரை, தமிழ்நாடு, சட்டீஸ்கர், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகியவை வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்கின்றன எனவே மத்திய அரசும், ஆண்டுதோறும், வேளாண்மைக்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தி, தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்,  பிரதமர், மத்திய நிதியமைச்சர், ஆகியோருக்கு கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இது குறித்து மீண்டும் மத்திய அரசை வலியுறுத்த,

    கும்பகோணம் உச்சிப்பிள்ளையார்கோயில் முன்பு ஏராளமான விவசாயிகள் திரண்டு, 11 சிதறு தேங்காய் உடைத்தும், உச்சிப்பிள்ளையார் கோயில் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர் மாலை அணிவித்தும், உதறி மலர்கள் தூவியும், அவரிடம் கோரிக்கை மனு சமர்பித்து கைகளில் தேசிய கொடி ஏந்தி நூதன கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here