திருவள்ளூர், மார்ச்.12 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தொடர்ந்து வழக்கறிஞர்களை அவமதித்து வருவதாக குற்றம் எழுப்பி ஆட்சியரை  கண்டித்து திருவள்ளூர் மாவட்ட வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருப்பதி சென்னை  205  தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக திருவள்ளுர் பட்டரைபெருமந்தூர் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலத்தை அரசு கடந்த 2011 ஆம் ஆண்டு கையகப்படுத்தியுள்ளது.

விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப் படுத்தியதற்கான இழப்பீடு தொகை அரசு சார்பில் கடந்த 2018- 2019 ஆம் ஆண்டு காலத்தில் கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால் போதிய அளவிலான இழப்பீடாக இல்லையென விவசாயிகள் 52 பேர் ஒன்றிணைந்து சென்ட்க்கு 1 லட்சம் ரூபாய் என அதிகரித்து இழப்பீடு தர வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

அதன் மீது மூன்று கட்ட விசாரணை கடந்த மாவட்ட ஆட்சியர்  ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்று வந்திருந்த நிலையில் அவர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதால். புதியதாக ஆட்சியராக பொறுப் பேற்றுக் கொண்ட பிரபு சங்கர் தலைமையில் நான்காவது கட்ட பேச்சு வார்த்தையானது கடந்த 4 ந் தேதியன்று நடைபெற்றது.

அப்பேச்சு வார்த்தைக்கு பட்டறை பெருமந்தூர் பகுதியினைச் சேர்ந்த நிலம் கொடுத்த 52 விவசாயிகளுக்கு ஆதரவாக திருவள்ளூர் நீதிமன்ற வழக்கறிஞர் உதயகுமார் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது விவசாயிகளுக்கு ஆதரவாக ஆட்சியரிடம் பேசிய  வழக்கறிஞர் உதயகுமார் தன்னுடைய வழக்கு எல்லாம் தனியாக பிரித்து கடந்த ஆட்சியர் உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். அதற்கு ஆட்சியர் தனக்கெல்லாம் நீ உத்தரவு போடக்கூடாது எனவும் மேலும் நீ வெளியே எழுந்து  போ என்றும் மேலும் உன்னை பிளாக் லிஸ்டில் வைத்துள்ளேன் என ஆட்சியர் பிரபு சங்கர் கூறி வழக்கறிஞர் உதயகுமாரை அவமதித்து வெளியேற்றியதாகவும் வழக்கறிஞர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான விஜயலட்சுமி என்பவர் போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைக்கு எதிராக குறுக்கு விசாரணை மேற்கொண்டதால், அவரை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அலுவலகத்திற்கு அழைத்து பெண்ணியத்தை பற்றியும், அவரை அவமதிக்கும் வகையில் பேசியதாகவும் அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் தொடர்ந்து வழக்கறிஞர்களை அவமதிக்கும் திருவள்ளூர் ஆட்சியர் பிரபு சங்கர் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென கோரி மாவட்டத்தில் உள்ள ஒட்டு மொத்த வழக்கறிஞர்களும் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து போராட்டம் மேற்கொண்டனர்.

மேலும் ஆட்சியர் மன்னிப்பு கேட்கும்வரை தொடர்ந்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் நாங்கள் ஈடுபடுவோம் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

பேட்டி

 

முரளி

வழக்கறிஞர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here