கும்பகோணம், ஏப். 11 –

கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதி பிரகாஷின், வழக்கறிஞர்களுக்கெதிரான விரோத போக்கை கண்டித்து, கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர், இன்றும் நாளையும் என இரு நாட்களுக்கு நீதிமன்ற புறக்கணிப்பு செய்வதுடன், இன்று, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு, அவரை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி, நடைபெற்ற கோரிக்கை முழக்க கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

நீதிபதி பிரகாஷை பணியிட மாற்றம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என வழக்கறிஞர் சங்க தலைவர் மா ராஜசேகர் பேட்டி !

கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவராக இருக்கும் பிரகாஷ், வழக்கறிஞர்கள் சங்க நலனுக்கு எதிராக நடந்துக் கொள்வதை எதிர்த்தும், அவரின் வழக்கறிஞர் விரோத போக்கையும், வழக்கறிஞர்களை தரக்குறைவாக நடத்துவதை கண்டித்தும், கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சங்க தலைவர் மா ராஜசேகர் தலைமையில், இன்று நீதிபதி பிரகாஷின் செயலை கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பு செய்ததுடன், ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு ஏராளமான திரண்ட வழக்கறிஞர்கள்,  நீதித்துறையும், தமிழக அரசும், நீதிபதியை விரைந்து பணியிட மாற்றம் செய்திட வலியுறுத்தியும், அவரது செயலை கண்டித்தும், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து நாளையும் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர், நீதிபதி பிரகாஷ் கும்பகோணம் நீதிமன்றத்தில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்படும் வரை வழக்கறிஞர்கள் சங்க போராட்டம் தொடரும் என வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மா ராஜசேகர், ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்திக்கும் போது பேட்டியளித்தார்.

 

பேட்டி : மா ராஜசேகர், தலைவர்,

கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கம்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here