மும்பை:

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ந் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்டனர்.

வீர மரணம் அடைந்த அந்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு மத்திய-மாநில அரசுகள் நிதி உதவி வழங்கி உள்ளன. மேலும் அந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு பணிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே வீர மரணம் அடைந்த 40 வீரர்களின் குடும்பத்தினருக்கு திரைப்படத் துறையினரும் நிதி உதவிகளை வழங்கி வருகிறார்கள். நடிகர் அபிதாப்பச்சன் ரூ. 2.1 கோடி நிதி உதவி வழங்கினார்.

நடிகர் அக்ஷயகுமார் ரூ.5 கோடி வழங்கினார். சல்மான்கான், கிரிக்கெட் வீரர் சேவாக், குத்துச்சண்டை வீரர் வீரேந்திரசிங் ஆகியோரும் நிதி உதவி வழங்கினார்கள்.

இந்த நிலையில் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 பேர் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கப்போவதாக அறிவித்துள்ளார். அவர் ரூ.1 கோடி கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 24-ந் தேதி லதா மங்கேஷ்கரின் தந்தை இறந்த தினமாகும். இதையொட்டி ரூ.1 கோடி நிதி உதவியை அளிப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here