கும்மிடிபூண்டி, செப். 08 –
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமரின் மகள் லக்சயாவின் காதணி விழாவை முன்னிட்டு தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஈகுவார்பாளையம் ஊராட்சி குமரன்நாயக்கன்பேட்டை வருகை தந்து குழந்தையை வாழ்த்தினார். நிகழ்வில் மாவட்ட அதிமுக செயலாளர்கள் பி.பலராமன், பி. வி. ரமணா, பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர் ராகுல் காந்தி நடைபயணம் செல்வது அவருடைய கட்சியை வளர்ப்பதற்காகவே எனக் குறிப்பிட்டார். மேலும், தமிழகத்தில் எத்தனை கட்சிகள் இருந்தாலும் பாசம் உள்ள கட்சி அதிமுக மட்டுமே என்றும், திமுகவின் 10 எம்எல்ஏக்கள் தங்களோடு பேசி வருவதாகவும், இதற்கு தாம் தற்போது கருத்து சொல்வது சரியாக இருக்காது எனவும் தெரிவித்தார். மேயரை மூன்றாவது வரிசையில் அமர வைப்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. திமுக குடும்ப ஆட்சி, கார்ப்பரேட் கட்சி ஆகையால் திமுகவில் மரியாதையை எதிர்பார்க்க முடியாது.
மின் திட்டங்களை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து முழுமையாக தெரிந்தால் மட்டுமே கருத்து சொல்ல முடியும் என்றார். மேலும் அதிமுக இது தொண்டர்களுக்கான கட்சி என்றும் இப்போது தொண்டர்கள்தான் இக்கட்சியை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். எனவும் நானும் .தொண்டர் என்ற உணர்வோடு இந்நிகழ்ச்சிக்கு வந்துதிருக்கிறேன். தொடர்ந்து உச்ச நீதிமன்ற வழக்கு குறித்து விசாரணையில் தான் தெரியும். இது காலம் கடந்த விசாரணை என்றார்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கைப் பற்றி குறிப்பிட வேண்டுமெனில் அதற்கு ஒரு சிறிய உதாரணத்தைக்குறிப்பிடுகிறேன். என்ற அவர் தமிழகத்தை 32 ஆண்டு காலம் ஆண்ட கட்சி அதிமுக அதுமட்டுமின்றி, பிரதான எதிர்க்கட்சியாகவும் தற்போது இருக்கிறது. எங்களுடைய கட்சி அலுவலகத்தில் நடந்த திருட்டு குறித்து முறைப்படி புகார் கொடுத்தும் கூட இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்த அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை மக்கள் உணர வேண்டும். ஒரு பிரதான கட்சிக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண குடும்பத்தில் திருட்டு போவதுக் குறித்து காவல்துறையிடம் புகார் செய்தால் என்ன நடவடிக்கை எடுப்பார்கள். மக்கள் இதனை சிந்தித்துப் பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தெலுங்கானாவில் சிலிண்டரில் மோடியின் படம் ஒட்டி கொடுப்பது தமக்கு தெரியாது என்று பதிலளித்தார். அம்மா உணவகங்கள் மூடுவது அம்மா உணவகம் ஏழைகளுக்கான திட்டம் அதை மூடும் திமுக அரசுக்கு தகுந்த பாடம் அடுத்து வருகின்ற தேர்தலில் மக்கள் வழங்குவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.