கும்பகோணம், அக்.02 – 

கும்பகோணம் அருகே உள்ள பாபநாசத்தில்  காந்தி ஜெயந்தி நாளான அக் 2 ல் கடந்த 22 ஆண்டுகளாக அன்று ஒரு நாள் மட்டும் ஆளில்லாத நேர்மை கடையை திறந்து வைத்து, ஒருநாள் வணிகம் நடைபெற்று வருகிறது.

அதைப்போல் இந்த ஆண்டும் இக்கடை திறக்கப்பட்டு அதில் வீட்டு உபயோகப் பொருட்கள், எழுது பொருட்கள், தின்பண்டங்கள் என பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இக் கடையில் பொருளுக்கான மதிப்பினை செலுத்திவிட்டு அப்பொருளை எடுத்துச் செல்லும் நூதன கடையாகும். இந்த நேர்மைக் கடையை பாபநாசம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பூரணி, ரோட்டரி சங்க ஆளுநர் பாலாஜி ஆகியோர் ஆளில்லா கடையை திறந்து வைத்தனர். மக்கள் ஆர்வத்துடன் தங்களுக்கு தேவையான பொருட்களை அதற்கான பணத்தை வைத்துவிட்டு எடுத்துச் செல்கின்றனர்.

தொடர்ந்து 22 ஆண்டுகளாக காந்தி ஜெயந்தி அன்று ஒரு நாள் இந்த கடை செயல்பட்டு வருவதை மக்கள் பாராட்டுகிறார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here