கும்பகோணத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருக் கோவில் அர்ச்சகர்கள் பட்டாச்சாரியார்கள் ஓதுவார்கள் பூசாரிகளுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கும்பகோணம், ஜன. 12 –

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் அனைத்து கோவிலில் உள்ள ஊழியர்களுக்கு சீருடையும், மற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், மற்றும் ஓதுவார்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கும் திட்டம் இன்று கும்பகோணம் பகுதிகளில் உள்ள திருக்கோவில்களில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அங்கு பணியாற்றும் ஊழியர்களான அனைவரும் சீருடை அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது பக்தர்களிடம் இருந்து அவர்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் 17 கோவில்களில் பணிபுரியும் 432  அர்ச்சகர்கள் பட்டாச்சாரியார்கள் ஓதுவார்கள் பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு அரசு தலைமை கொறடா கோவி செழியன் சீருடைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கோவில் உதவி ஆணையர்கள் இளையராஜா ஜீவானந்தம் மற்றும் செயல் அலுவலர்கள் கலந்து கொண்டு சீருடைய வழங்கினார்கள் தொடர்ந்து அரசு தலைமை கொறடா கோவி செழியன் பேசுகையில்

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களான அா்ச்சகா்கள், பட்டாச்சாரியாா்கள், ஓதுவாா்கள், பூசாரிகளுக்கு  திருக்கோயில் பணியாளா்களுக்கு நபருக்கு இரண்டு எண்ணிக்கையிலான சீருடையும் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.

கோயில்களில் பணிபுரியும் அனைத்துப் பணியாளா்களையும் எளிதில் அடையாளம் காணும் வகையில் அா்ச்சகா், பூசாரிகளுக்கு மயில்கண் கரை பருத்தி வேட்டியும், கோயில்களில் பணிபுரியும் பெண் பணியாளா்களுக்கு அரக்கு நிறத்தில் மஞ்சள் நிற கரையுடன் கூடிய புடவையும், ஆண் பணியாளா்களுக்கு பழுப்பு நிற கால்சட்டை மற்றும் சந்தன நிற மேல்சட்டை துணியும் வழங்கப்படுகிறது. இதனை தமிழக முதல்வர் நேற்று துவக்கி வைத்தார் அதன் ஒரு பகுதியாக இன்று கும்பகோணம் திருவிடைமருதூர் பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் இந்து சமய அறநிலைய துறையில் உள்ள 17 கோவிலில் உள்ள அர்ச்சகர் பூசாரிகள் பட்டாச்சாரியார்கள் உள்ளிட்ட 432 நபர்களுக்கு வழங்கப்பட்டது என்று தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here