மீஞ்சூர், ஆக. 29 –
திருவள்ளுர் மாவட்டம்,மீஞ்சூர் ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் கல்லூரியில் 21வது பட்டமளிப்பு விழா பகவான் மகாவீர் கலையரங்கில் கடவுள் வாழ்த்து மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கிய அவ்விழாவிற்கு, அக்கல்லூரியின் பொறுப்பு முதல்வர்முனைவர்நா. சுஜாதா தலைமை வகித்தார். அதனைத்தொடர்ந்து, கல்லூரி செயலாளர் ஒ.லலித்குமார் ஜெயின் பட்டமளிப்பு விழாவினைத் தொடங்கி வைத்து அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்.
மேலும் அவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தென்னிந்திய செலவு மற்றும் பணி சிறப்பு கணக்காளர்கள் நிறுவனத்தின் தலைவர் திவ்யாஅபிஷேக் சிறப்பு செய்ய, கல்லூரி நிர்வாகத்தினர் நினைவுப் பரிசினை வழங்கி சிறப்பித்தனர்.
இப்பட்டமளிப்பு விழாவில் முன்னாள் கல்லூரி நிர்வாகத்தினர்களான தலைவர் காந்திலால் எச் சங்வி தற்போதைய தலைவர் நேமிசந்த் கட்டாரியா, துணைத்தலைவர் சாந்திலால் எஸ் ஜெயின். இணைச்செயலாளர் சுரேஷ் ராத்தோட் மற்றும் குழு உறுப்பினர் ஜிதேந்தர் எஸ் மேஹ்தா ஆகியோர் பங்கேற்றனர்.
:தொடர்ந்து கல்லூரி பொறுப்பு முதல்வர் முனைவர் நா.சுஜாதா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து 2022-2023 கல்வியாண்டிற்கான ஆண்டறிக்கையை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர் உரையாற்றும் பொழுது, மாணவர்கள் கடின உழைப்பின் மூலம் சாதனையாளர்களாக உயரலாம், அதற்கு மொழி ஒரு தடையே இல்லை என வலியுறுத்தினார். தொடர்ந்து, மாணவர்களை நோக்கி நீங்களும் ஒரு நாள் இந்த மேடையில் சிறப்பு விருந்தினராக வரவேண்டும் என்று உரையாற்றிய பொறுப்பு முதல்வரின் உரையை மேற்கோள் காட்டி பேசி உரையை நிறைவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து 402 மாணவர்களுக்கு பட்டமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது இதில் திரளான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணாக்கர்களின் பெற்றோர்கள் கலந்துக் கொண்டனர்.





















