கும்பகோணம், ஜன. 12 –
கும்பகோணத்தில் ரயில் நிலையத்தில் விவேகானந்தரின் 159 வது பிறந்த நாளை முன்னிட்டு ரயில் நிலையத்தில் உள்ள விவேகானந்தர் உருவப்படத்திற்கு அரசு தலைமை கொறடா கோவி செழியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சி மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் நகர செயலாளர் தமிழழகன் ஒன்றிய செயலாளர் கணேசன் மாவட்ட பிரதிநிதி கரிகாலன் ரயில்வே உபயோகிப்பார்கள் சங்க பொறுப்பாளர்கள் கிரி வேதா முரளி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விவேகானந்தர் பற்றிய வரலாறு புத்தகங்கள் வழங்கப்பட்டது .
நிகழ்ச்சி ஏற்பாடுகளை விவேகானந்தர் நற்பணி மன்ற பொறுப்பாளர் ராமநாதன் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். தொடர்ந்து அரசு தலைமை கொறடா பேசுகையில் சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றி, இந்தியாவின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்து தாயகம் திரும்பி 1897 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி கும்பகோணத்துக்கு வருகை புரிந்து 3 நாட்கள் தங்கினார். அப்போது நகரின் முக்கிய பிரமுகர்கள் சார்பில் அளித்த வரவேற்புக்கு, பதிலுரை அளிக்கும் வகையில் குடந்தை போர்ட்டர் டவுன் ஹால் உள்ளிட்ட இடங்களில், சுவாமி விவேகானந்தர் வேதாந்தத்தின் பணி எனும் தலைப்பில் வரலாற்று சிறப்புமிக்க உரையாற்றினார்.குறிப்பாக எழுமின், விழிமின், குறிசாறும் வரை நில்லாது செல்மின் என்ற அவரது சொற்றொடர் கும்பகோணத்தில் தான் முதன் முதலில் கூறினார் என்பது குறிப்பிடதக்கது.
சிகாகோ சென்று சுவாமி விவேகானந்தர் தாயகம் திரும்பிய 125-ம் ஆண்டு வரும் ஜனவரி 26-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. என்று தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தெரிவித்தபோது விவேகானந்தர் சிலை விரைவில் கும்பகோணத்தில் நிறுவப்பட உள்ளது என்று தெரிவித்தார்