கும்பகோணம் அருகே ஆடுதுறையில்  வன்னியர் சங்கம் சார்பில் முப்பெரும். நிகழ்ச்சி  வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் ம.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

கும்பகோணம், செப். 24 –

கும்பகோணம் அருகே ஆடுதுறையில் வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ம. க. ஸ்டாலின் தலைமையில் முப்பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா. அருள்மொழி சிறப்புரை ஆற்றினார். வன்னியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 10.5% இட ஒதுக்கீட்டை கடந்த 40 ஆண்டு காலமாக போராடி பெற்றுத் தந்த மருத்துவர் ஐயா அவர்களுக்கு  நன்றி தெரிவித்தும், இட ஒதுக்கீட்டுக்கான போராட்டத்தில் 1987ஆம் ஆண்டு தொடர் சாலை மறியல் போராட்டத்தில் இன்னுயிர் நீத்த 21 தியாகிகளுக்கு மலர் தூவி வீரவணக்கம் புகழஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து சத்ரியப் பேரினத்துக்கு சமூகநீதி எழுச்சி இசை நிகழ்ச்சியை புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி குழுவினர் வழங்கினர்.

வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா. அருள்மொழி பேசுகையில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய போராட்டத்தை தந்து எழுச்சியை கொடுத்தவர் மருத்துவர் ஐயா அவர்களுக்கு நன்றியை தெரிவித்தார். தந்தை பெரியாருக்குப் பிறகு அறிவுப் புரட்சியை உருவாக்க நினைத்த பெரும் தலைவர்  மருத்துவர் அய்யா தான் என்றும். பெரியார் சமுதாயத்தில் ஒரு புரட்சியை உருவாக்கினார் அதற்கு பிறகு சமுதாயத்தில் மிகப்பெரிய புரட்சியை உருவாக்கியவர் மருத்துவர் ஐயா அவர்கள் என்றார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வன்னியர் சங்க செயலாளர் க.வைத்தி,  உழவர் பேரியக்கம் மாநில தலைவர் கோ ஆலயமணி, வடசென்னை மாநில துணைப் பொதுச் செயலாளர் ராதா கிருஷ்ணன், மாநிலத் துணைத் தலைவர் சுப்பிரமணிய ஐயர், முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் ஐயப்பன், படைப்பாளிகள் பேரியக்கம் மாநில பொது செயலாளர் கவிஞர் ஜெயபாஸ்கரன்,  தமிழறிஞர் பேராசிரியர் டாக்டர். சத்தியமூர்த்தி, பாமக மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் திருமதி.பானுமதி சத்தியமூர்த்தி, பாமக மு.தலைமை நிலைய செயலாளர் கோதை.கேசவன் ,பொறியாளர் கோமகன், ஆடுதுறை பட்டிமன்ற பேச்சாளர் அழகு பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் தஞ்சை மாவட்ட வன்னியர் சங்க நிர்வாகிகள் மதி விமல் , எஸ் பி குமார், எஸ் கே ரமேஷ், வெங்கட்ராமன், தியாக பக்கிரிசாமி ,,எம் ரமேஷ், , எம் ஏ குமார், மகா வேந்தன், ஏபிஎஸ் கோபு உள்ளிட்ட பாமக மற்றும் உழவர் பேரியக்கம் சார்ந்த நிர்வாகிகளும்  திரளானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here