கும்பகோணம், நவ. 24 –
கும்பகோணம் அருகே திருபுவனத்திற்கும் வேப்பத்தூருக்கும் இடையே காவிரி ஆற்றில் இருந்த சிமெண்ட் கான்கிரீட் பாலம் சேதமடைந்ததை தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைக்கப்பட்ட மரப்பாலமும் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. பாலத்தில் பொது மக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் உயிரை பணையம் வைத்து தினந்தோறும் அதில் சென்று வருகின்றனர். விபத்துக்கள் ஏற்படும் முன் காவிரியாற்று பாலத்தை விரைந்து கட்டி முடிக்க வேண்டும் என கோரிக்கையை அரசுக்கு வைக்கின்றனர்.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம் திருபுவனத்திற்கும் – வேப்பத்தூருக்கும் இடையில் உள்ள காவிரி ஆற்றில் ஏற்கனவே சிமெண்ட் கான்கிரீட் பாலம் இருந்தது. அந்தப் பாலம் சேதமடைந்ததை தொடர்ந்து இடித்து அகற்றப்பட்டது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தாற்காலிகமாக மரப்பாலம் அமைக்கப்பட்டது.
இந்த மரப்பாலமும் தற்போது சேதமடைந்துள்ளது. திருவிசைநல்லூர், வேப்பத்தூர், அம்மன்பேட்டை, போன்ற பகுதிகளிலிருந்து திருபுவனம் சென்று வர பொதுமக்கள் இந்த பாலத்தையே பயன்படுத்தி வருகின்றனர். மாற்றுப்பாதையில் சென்று வரவேண்டுமெனில் கூடுதலாக 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது . எனவே சேதமுற்ற நிலையில் உள்ள மரப்பாலத்தில் தங்களது உயிரை பணயம் வைத்து பள்ளி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் நாள்தோறும் இப்பாலத்தின் வழியே சென்று வருகின்றனர். அரசு உடனடியாக காவிரி ஆற்றில் மரப்பாலத்திற்கு பதிலாக சிமெண்ட் கான்கிரீட் பாலம் அமைக்க வேண்டும்
தற்போது உள்ள மரப்பாலம் எந்த நேரமும் விழும் அபாயத்தில் உள்ளது . எனவும் அதனால் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் , இது குறித்துஅரசு ஆய்வுமேற் கொண்டு பாலத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது..