கும்பகோணம், ஜூலை. 06 –
கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூர் கிராமம் குருமூர்த்தி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வலம்புரி விநாயகர் மற்றும் திரிபுரசுந்தரி சமேத சந்திரமௌலீவரர் திருக்கோயில் மற்றும் அதில் அருள்பாலிக்கும், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், தட்சணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் மற்றும் சுவர்ணாகர்ஷண பைரவர், குபேரர், தனலட்சுமி மற்றும் சரஸ்வதி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு இன்று மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
கும்பகோணம் அருகேயுள்ள தேப்பெருமாநல்லூர் கிராமம் குருமூர்த்தி நகரில் அமைந்தள்ள ஸ்ரீ வலம்புரி விநாயகர் மற்றும் திரிபுரசுந்தரி சமேத சந்திரமௌலீவரர் திருக்கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த 04ம் தேதி திங்கட் கிழமை விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து ஹோமம், கும்ப அலங்காரம் ஆகியவற்றுடன் முதல் கால யாக பூஜை தொடங்கி நேற்று 2ம் மற்றும் 3ம் கால யாக சாலை பூஜையும் தொடர்ந்து இன்று காலை 4ஆம் கால யாகசாலை பூஜைகளும், அதன் நிறைவில், மகா பூர்ணாஹ_தியும் மகா தீபாராதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து, நாதஸ்வர மேள தாள மங்கள வாத்தியங்கள் முழங்க புனிதநீர் நிரப்பிய கடங்கள் புறப்பாடும் அதனை தொடர்ந்து சப்தமி திதி உத்திர நட்சத்திரத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழந்தனர்.