மணிப்பூர் மாநில ஆளுநராக பொறுப்பேற்ற பின் கும்பகோணத்திற்கு முதல் முறையாக வந்த அம் மாநில ஆளுநர் இல. கணேசன், சுவாமிமலை சுவாமி நாத சுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம். தமிழில் அர்ச்சனை செய்து வழிபட்டார் .

கும்பகோணம், செப். 14

தஞ்சாவூரினை  சொந்த ஊராகக் கொண்ட பாஜகவை சேர்ந்த இல. கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆளுநராக பதவி ஏற்ற பின் முதன் முறையாக தஞ்சாவூர் வந்த இல. கணேசன் நேற்று சுவாமிமலை அருகிலுள்ள சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் வழிபாடு நடத்தினர். அப்போது தமிழில் அர்ச்சனை செய்து முருகக் கடவுளை வணங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இல. கணேசன் தனது பிரார்த்தனை நிறைவேறியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இங்கு இன்று வந்ததாகவும், இதனைத் தொடர்ந்து தங்களது பூர்வீக கிராமமான மகாராஜபுரத்தில்  உள்ள கிராம தேவதை ஆலயத்திற்கு செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.

மணிப்பூர் இயற்கையான அழகான இடம். பாரதத்தின் சுவிட்சர்லாந்து என இந்த இடம் அழைக்கப்படுகிறது. பிரச்சினைகள் ஏதுமில்லை. பக்கத்து எல்லையாக பர்மா உள்ளது. அது இந்தியாவின் நட்பு நாடாக உள்ளது.

எனவே அப்பகுதியில் பிரச்சனை ஏதுமில்லை. மணிப்பூரில் இருப்பது தஞ்சாவூரில் இருப்பது போல் உள்ளது என இல .கணேசன் மேலும் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here