கும்பகோணம், ஆக. 01 –

நேற்று கும்பகோணம் தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர் கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி சந்திரசேகர மூப்பனார் தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு வந்த அனைவரையும் மாவட்ட தலைவர் சாதிக்அலி வரவேற்றார். மேலும், தேர்தல் உயர்மட்டக்குழு உறுப்பினர்  ராஜாங்கம் இக்கூட்டத்திற்கு முன்னிலை வகிக்க  மாநகர் தலைவர் பி எஸ் சங்கர் உட்பட மாவட்ட, மாநகர, வட்டார, நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக திமுக தேர்தல் வாக்குறுதியாக அளித்த கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்குதல், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உடனடியாக வழங்கிடவும், நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள தஞ்சாவூர் விக்ரவாண்டி தேசிய நெடுஞ்சாலையை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும், இந்திய குடியரசு தலைவராக தேர்தெடுக்கப்பட்ட பழங்குடியினத்தை சேர்ந்த திரௌபதி முர்மு க்கு வாழ்த்து தெரிவித்தும், அவரை குடியரசு தலைவராக தேர்வு செய்த பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்றி தெரிவித்தும், அஇஅதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்தும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன மேலும், நெசவாளர்களின் நீண்ட கால கோரிக்கையான கோறாபட்டு, கச்சாபட்டு விலை உயர்வை தடுக்கவும், அதன் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க வலியுறுத்தியும் மேலும், பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜி கே வாசன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த முன்னாள் எம்.பி., கே.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மாவட்ட தலைவர் ஏ. ஜிர்ஜிஸ், முன்னாள் மாநில முறையீட்டு குழு உறுப்பினர் என் கருப்பண்ண உடையார், உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here