கும்பகோணம் வினாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு தடை விதித்துள்ள தமிழக முதல்வரின் துணைவியார் துர்கா ஸ்டாலினுக்கு ஆயிரம் அஞ்சல் அட்டைகளை அனுப்பி இந்து மக்கள் கட்சியினர் நூதனப் போராட்டம் நடத்தினர்.
செய்தி சேகரிப்பு ரமேஷ்
கும்பகோணம், செப். 2 –
விநாயகர் சதுர்த்தி விழாவினையொட்டி, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலம் நடத்தி நீர்நிலைகளில் கரைத்திடவும் தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், ஆன்மீகத்தின் மீது நம்பிக்கையும், பற்றும் கொண்ட தமிழக முதல்வரின் துணைவியார் துர்கா ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலினிடம் எடுத்துக்கூறி, இத்தடையினை நீக்க வலியுறுத்த வேண்டி, கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் தபால் நிலையத்தில் இருந்து இந்து மக்கள் கட்சியினர் ஆயிரம் அஞ்சல் அட்டைகளை அனுப்பினர்.
கொரோனா தொற்று பரவலை காரணம் காட்டி, தமிழக அரசு, வரும் 10ம் தேதி நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவினை யொட்டி, பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபாடு செய்யவும், ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைத்திடவும் தடை விதித்துள்ளது இந் நிலையில், தற்போது தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்து, அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது ஆனால் பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட மட்டும் அரசு தடை விதித்துள்ளது நியாயமற்றது. முன்னதாக தபால் நிலையம் முன்பு இந்து மக்கள் கட்சி திருநாகேஸ்வரம் நகர தலைவர் உப்பிலி தம்பு தலைமையில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது, இதில் மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் குருமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பின் வருமாறு பேட்டி அளித்தார்.