கும்பகோணம். பிப். 13 –
திமுகவின் கடந்த 8 மாத கால ஆட்சியில் மக்களுடைய நம்பிக்கையை வெகுவாக இழந்து இருக்கிறது. வாக்குறுதிகளை காத்தாடி போல் பறக்க விட்டு இருக்கிறார்கள் . இதனை எதிர் பார்த்து மக்கள் ஏமாந்து இருக்கிறார்கள். என கும்பகோணத்தில் திருமண நிகழ்வில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமாகா தலைவர் ஜி கே வாசன் இவ்வாறு தெரிவித்தார்.
கும்பகோணம் மாநகராட்சி 13வது வட்டத்தில் போட்டியிடும் தமாக வேட்பாளர் ஜெய்ஹிந்த் மோகனுக்கு சால்வை அணிவித்து அவரை அறிமுகப்படுத்தி, வாழ்த்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஜி கே வாசன்,
வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தமாகா வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்று உள்ளாட்சியில் நல்லாட்சி ஏற்படுத்துவார்கள் என்றும், தமிழக மீனவர்கள் அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பது வேதனைக்குரிய வருத்தத்துக்குரிய விஷயம் என்றும், இலங்கை அரசுடன் கண்டிப்புடன் பேசக்கூடிய கட்டாயத்தில் மத்திய அரசு இருக்கிறது இலங்கையில் பொருளாதார மேம்பாட்டிற்கு இந்திய அரசு பல கோடி டாலரை வழங்கும் வேளையில், அவர்கள் மனிதாபிமானம் இல்லாமல் மீனவர்களைத் தாக்குவது படகுகளை ஏலம் விடுவது என்பது ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் எனவே இலங்கை அரசுடன் மத்திய அமைச்சர் அதிகாரிகள் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி நமது மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் மக்களின் கோரிக்கை என்றும், மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க கூடிய நாடு நமது இந்திய நாடு, பள்ளி கல்லூரிகளில் கோட்பாடு தேவை மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி பயின்று இந்தியாவை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் அதற்கு மாணவர்களோடு அரசியல் கட்சிகள் துணை நிற்க வேண்டும் ஒருபோதும் கல்வியில் அரசியல் கூடாது கடந்த 8 மாத கால திமுக ஆட்சியின் செயல்பாட்டினால் அரசு, மக்களுடைய நம்பிக்கையை வெகுவாக இழந்து இருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை காத்தாடி போல் பறக்க விட்டு இருக்கிறார்கள். இதனை எதிர் பார்த்து மக்கள் ஏமாந்து இருக்கிறார்கள். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை பற்றி கேள்வி கேட்க தயங்க மாட்டார்கள் என்றும் கொடுத்த வாக்குறுதிகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றுவது தான் அரசின் கடமை குறித்த நேரத்தில் அதனை செய்து முடிக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய வேண்டுகோள் என்று தமாகா தலைவர் ஜி கே வாசன் இவ்வாறு தெரிவித்தார்.