கும்பகோணம், செப் . 18 –  

திவ்ய தேச 108 வைணவத் தலங்களில், ஒன்றான கும்பகோணம் அருகே உள்ள உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ வெங்கடாஜலபதி சுவாமி திருக்கோவிலில் இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமையாக உள்ளதால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் காண இத்திருக்கோயிலுக்கு வந்தனர்.

ஆனால் தமிழ்நாடு அரசின் கொரோனா பாதுப்பு தடுப்பு நடவடிக்கையால் வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவித்துள்ளது.

   பொதுவாக புரட்டாசி மாதங்களில் வைணவத் திருக்கோயில்களில் பக்தர்கள் சிறப்பாக வழிப்பட்டு வருவது வழக்கம். மேலும் அம்மாதம் முழுவதும் விரதங்கள் மேற் கொள்வார்கள். பெருமாளுக்கு உகந்த நாளாம் சனிக்கிழமை என்பதால் அம்மாதம் முழுவதும் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும், தமிழ்நாடு முழுக்க இருக்கும் வைணவத் திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடப்பதும் வழக்கமாக இருந்து வந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதுகாப்பு தடுப்பு சட்டத்தல் பக்தர்களுக்கு வெள்ள, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அனுமதி  கிடையாது. அதனால் புரட்டாசி முதல் கிழமையான இன்று ஏராளமான பக்தர்கள் திருக்கோயில் ராஜகோபுரம் முன்பு மலர் மாலைகள் அணிவித்து, திருவிளக்கை ஏற்றி வைத்தும், சுவாமி அருள்பாலிக்கும் திசை நோக்கி வணங்கி, முழுமையான திருப்தி இன்றி ஊர் திரும்புகின்றனர். பல பக்தர்கள் வெளியூர்களில் இருந்து வந்த போதும் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here