கும்பகோணத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்வது குறித்து தீயணைப்பு துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் பேரிடர் மீட்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கும்பகோணம் , செப் . 25 –

கும்பகோணத்தில் வடகிழக்கு பருவ மழையினால் ஏற்படும் புயல் மற்றும் வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் பொது மக்களை காப்பாற்றுதல் குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி டபிர் படித்துறையில் நடந்தது. தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் வடகிழக்கு பருவ மழை காலங்களில் ஏற்படும் புயல், வெள்ளம், கனமழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். இவர்களை எவ்வாறு பாதிப்புகளில் இருந்து எளிதில் எப்படி மீட்டு கொண்டு வருவது என்பது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி  தீ அணைப்பு அலுவலர் ராமசுப்பிரமணியம் தலைமையில் செயல் விளக்கம் செய்து காட்டினார்.

அப்போது தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் வீட்டில் தீடிரென தீப்பிடித்தால் அதை எவ்வாறு அணைப்பது. புயல், மழை போன்ற பேரிடர் காலங்களில் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்தால் அதை காலதாமதம் இன்றி எவ்வாறு அகற்றுவது. பேரிடர் காலங்களில் மட்டும் இன்றி கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களையும், வாகன விபத்தின் போது சிக்கியவர்களையும் உயிருடன் எவ்வாறு காப்பாற்றுவது. அதிகமான வெள்ள காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை படகு மூலம் மீட்பது.

ஆற்றில் வெள்ளப் பெருக்கின் போது ஒரு கரையில் உள்ளவர்களை மறுகரைக்கு கயிறு மூலம் மீட்பது எப்படியென வீடுகளில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களை வைத்து எளிதாகவும் அச்சமின்றியும் அவர்களின் உடமை உயிர்களை பாதுகாத்து கொள்வது எப்படி எனவும் விளக்கி விழிப்புணர்வை மக்களிடம் விளக்கினார்கள்.

வீடுகளில் உள்ள தண்ணீர் கேன், பிளாஸ்டிக் குடம், தண்ணீர் பாட்டில்கள், லாரி டியூப், வாழைத் தண்டு, காலி சிலிண்டர் போன்ற மிதவைகளைப் பயன்படுத்தி, தங்களை தாங்களே எவ்வாறு காப்பாற்றுவது என, தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

ரப்பர் படகு வாயிலாக, வயதானோர், நோய்வாய்ப்பட்டோர் மற்றும் கால்நடைகளை எவ்வாறு காப்பாற்றுவது, தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடுவோரை காப்பாற்றி முதலுதவி அளிப்பது உள்ளிட்ட மீட்பு பணிகளை  சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கோட்டாட்சியர் சுகந்தி வட்டாட்சியர் தங்க பிரபாகரன் மற்றும் பொதுமக்கள் மத்தியில் செய்து காட்டினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here