கும்பகோணம் ஜூன். 10 –
கும்பகோணம் அருகே உள்ள இன்னம்பூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் எழுத்தரிநாதர் திருக்கோவிலுக்கு ரூ. 63 லட்சம் மதிப்பீட்டிலான புதிய அன்னதான கூடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டப்பணிகளை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் தலைமைச்செயலகத்தில் இருந்து இன்று திறந்து வைத்தார். அதன் ஒரு பகுதியாக கும்பகோணம், அருகே இன்னம்பூர், அருள்மிகு எழுத்தரிநாதர் திருக்கோயிலில் ரூ.63 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாநிலங்களவை உறுப்பினரும் மாவட்ட திமுக செயலாளருமான கல்யாணசுந்தரம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் ஒன்றிய செயலாளர்கள் கணேசன் ஆர்.கே.பாஸ்கர் மாநகராட்சி மேயர் சரவணன் துணை மேயர் சு.ப.தமிழழகன், கும்பகோணம் கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, கோட்டாட்சியர் லதா, வட்டாட்சியர் தங்க.பிரபாகரன், வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் தேவிகா, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சாந்தா, இணை ஆணையர் மோகன சுந்தரம், துணை ஆணையர் உமாதேவி, குடிசை மாற்று வாரிய உதவி நிர்வாக பொறியாளர் யோகேஸ்வரன், உதவி பொறியாளர் கார்த்திக், இன்னம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், பகுதி செயலாளர் கோவிந்தராஜன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.