கும்பகோணம், டிச. 27 –

பட்டு நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் கைத்தறிப் பட்டு நெசவுத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பட்டு நூல் விலையை குறைக்க வலியுறுத்தி இன்றிலிருந்து எதிர்வரும் 2ம் தேதி வரை கும்பகோணம் மற்றும் திருபுவனம் பட்டு கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் வேலை நிறுத்தப் போராட்டாத்தில் ஈடுபடுகின்றனர்.

கும்பகோணத்தில், கடந்த இரு மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ பட்டு நூல் விலை 3000 ரூபாய் ஆக இருந்தது. தற்போது இதன் விலை  6,200 ரூபாயாக  உயர்ந்துள்ளது.  இதனால் பட்டு கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு, குறு உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பட்டு நூல் விலை உயர்வுக்கு தகுந்தார் போல் பட்டுப் புடவைகளின் விலைகளை உயர்த்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பட்டுநூல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என்றும் தேவைக்கேற்ப வெளிநாடுகளிலிருந்து பட்டு நூல் இறக்குமதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கும்பகோணம் மற்றும் திருபுவனம் பட்டு கைத்தறி சிறு குறு உற்பத்தியாளர்கள் இன்றிலிருந்து ஒரு வார காலத்திற்கு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கும்பகோணம் மற்றும் திருபுவனம் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டு கைத்தறிகள் உள்ளன. இத்தொழிலை நம்பி ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட நெசவுத்தொழிலாளர்கள் உள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here