கும்பகோணம், செப். 30 –
கும்பகோணம் மகாமக குளத்தின் கிழக்கரையில் உள்ள அமிர்தவள்ளி சமேத அபிமுகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்று வரும் நவராத்திரி கொலுவினை ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் கண்டு களித்து வருகின்றனர்.
கும்பகோணத்தில் நவராத்திரி கொலு, புரட்டாசி மாத அமாவாசைக்கு மறுநாள் துவங்கி, ஒன்பது நாட்கள் நடைப்பெற்று வரும் நவராத்திரி பண்டிகை விழாவினை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இவ்விழாவில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை, அடுத்து மூன்று நாட்கள் லட்சுமி, கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியை வணங்கி வழிபாடு செய்யப்படுவது வழக்கமாகும்.
மேலும் இவ்விழாவினை முன்னிட்டு கோயில்கள், வீடுகள், நிறுவனங்களில், கொலு வைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் மகாமக குளத்தின் கிழக்கரையில் உள்ள அமிர்தவள்ளி சமேத அபிமுகேஸ்வரசுவாமி திருக்கோயிலில், மத நல்லிணக்க குடும்பமும், யசோதை கண்ணனும், வக்கீல் கல்யாணராமையர் மனைவி கல்யாணி இடைச்சி அலமேலு தயிர் கடைதல், யசோதாயின் மடியில் கண்ணன் இருப்பது போலவும், முஸ்லிம் வியாபாரி முகமது காசிம், வெண்ணை உண்ணும் பாலகிருஷ்ணன், மாமன்னன் ராஜராஜ சோழன் தனது நாட்டு மக்களை காண குதிரை மீது அமர்ந்து நகர் உலா செல்லுதல், பழங்காலத்தில் நீதிமன்றத்தில் நீதிபதி திருடன் ஒருவருக்கு தண்டனை வழங்குதல், வக்கீல் வாதாடுவதையும், வெள்ளைக்கார நாட்டு அதிகாரி ஒருவர் குடும்பத்துடன் அதனைப்பார்த்தல், மகாபாரத காட்சி, கிருஷ்ணர் சயனம், கோலம் காட்சி, காளிங்க நர்த்தனம் ஆடும் அற்புதகாட்சி, இந்திர சபை காட்சி உள்ளிட்ட பல்வேறு காட்சிகளை வெளிப்படுத்தும் வகையில் பொம்மைகள் காட்சிப்படுத்தப் பட்டுயிருந்தன
இதில் தமிழ்நாட்டில் வேறுயெங்கும் காண முடியாதா பாலகன் பொம்மைகள் மற்றும் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கொலு பொம்மைகள் இத்திருக்கோயிலில் இடம் பெற்றிருந்தன. இந்த நவராத்திரி கொலு பொம்மைகளை பார்க்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர்.. நவராத்திரி விழாவின் நான்காம் நாளை முன்னிட்டு நேற்று அமிர்தவள்ளி தாயார் தட்சிணாமூர்த்தி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.