கும்பகோணம், அக். 23 –

14 ஆண்டுகளுக்கு பிறகு, கும்பகோணம் உள்ளுர் ஊராட்சி, அன்னை அஞ்சுகம் நகர், செல்வ விநாயகர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, இன்றிரவு முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

கும்பகோணம் உள்ளுர் ஊராட்சி அன்னை அஞ்சுகம் நகரில் அமைந்துள்ள செல்வ விநாயகர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் 14 ஆண்டுகளுக்கு பிறகு, பல மாதங்களாக நடைபெற்று வந்த, கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து வரும் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு இன்று புனிதநீர் நிரப்பிய கடங்கள் திருக்கோயில் வளாகத்தில் இருந்து நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க, யாக சாலை பிரவேசமும், அதன் பிறகு, ஹோமத்திற்காண பல்வேறு நறுமண மூலிகை பொருட்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க, ஓதுவா மூர்த்திகளின் திருமுறை பாராயணம் ஆகியவற்றுடன், முதல் கால யாக பூஜைகள் தொடங்கியது.

தொடர்ந்து நாளை 23ம் தேதி சனிக்கிழமை காலை மாலை என இரு கால யாக பூஜைகளும், பின்னர் 24ம் தேதி ஞாயிறு காலை 4ம் கால யாக பூஜைகள் நிறைவு பெற்ற மகா பூர்ணாஹதியுடன் மங்கள ஆர்த்தி செய்யப்பட்டு கடங்கள் புறப்பாடும் அதனையடுத்து மூலவர் விமானம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் ஒரே சமயத்தில் மகா கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here