ராமநாதபுரம், ஜூலை 6-

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள  கிருஷ்ணா  இன்டர்நேஷனல் பள்ளி 6ம் ஆண்டு விளையாட்டு விழா வெகு சிறப்பாக நடந்தது.

 

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் தேவிபட்டினம் அருகே உள்ள பாரம்பரிய விவசாய குடும்பத்தை சேர்ந்த மாதவனுார் கிருஷ்ணன் என்பவர் ராமநாதபுரம் மாவட்ட மாணவர்கள் உயர்கல்வி கற்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் பரந்த நிலப்பரப்பில் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியை துவங்கினார். பள்ளியின் நோக்கமே மாணவர்களுக்கு சிறந்த கல்வி, சிறந்த விளையாட்டு, ஒவ்வொரு மாணவர்களின் தனித்திறமையை அறிந்து அதை வெளிகொணர்ந்து அந்த மாணவர்களை உலக அளவில் பிரபலப்படுத்துவதுதான் முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படுகின்றனர். இதற்காக கல்வி, விளையாட்டு, அறிவியல், வேளாண்மை, காவல் என ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் அதிகாரிகளை பள்ளி விழாக்களில் பங்கேற்க வைத்து மாணவர்களுக்கு மோட்டிவேட் ஸ்பீச் அளிக்கின்றனர். இதன் விளைவு தற்போது இப்பள்ளி மாணவர்கள் கல்வி மட்டுமின்றி விளையாட்டிலும், கலைத்திறனிலும், இசையிலும் சிறந்து விளங்கி ராமநாதபுரம் மாவட்டத்திற்கே பெருமை சேர்த்து வருகின்றனர்.


தற்போது தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் 6ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளி நிறுவனர் மற்றும் சேர்மன் மாதவனுார் கிருஷ்ணன் தலைமை வகித்து, மாணவர்கள் கல்வி கற்பதுடன் இல்லாமல் தங்களின் தனித்திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவரின் திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும், என பேசினார்.
சென்னை எப்சி கால்பந்து அணியின் பயிற்சியாளர் டைட்டல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ராமநாதபுரம் வேளாண்மை துறை உதவி இயக்குனர் ஷேக்அப்துல்லா ஆகியோர் போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். இப்போட்டிகளில் நான்கு அணிகள் மோதியதில் வெக்டரி அணி சிறந்த அணியாக தேர்வு செய்து சுழற்கோப்பையை வென்றது. விழாவில் தாளாளர் கணேககண்ணன், செயலாளர் ஜூவலதா, இயக்குனர் முனியசாமி, நிர்வாக இயக்குனர் சதிஷ் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் முத்துக்குமார் நன்றி கூறினார். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here