கோயம்பேடு, ஏப். 21 –

சென்னை, கஞ்சா மற்றும் போதை பொருட்களின் விற்பனையை தடுக்க காவல்துறையினர்  தனிப்படை அமைத்து இரவு பகலாக கஞ்சா வேட்டையை கண்காணித்து வருகின்றனர்.  சிறையில் இருந்து வெளியே வந்து மறுபடியும் கஞ்சா விற்பனை செய்யும்  பழைய குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர்.

இதனையடுத்து முக்கிய இடமாக விளங்கும் சென்னை கோயம்பேடு மார்க்கெட், கோயம்பேடு பேருந்துநிலையம் .என பல்வேறு இடங்களில்  கோயம்பேடு போலீசார் வாகன சோதனையை  தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்  கோயம்பேடு வழியாக ஒரு கும்பல் காரில  கஞ்சா கடத்தி வருவதாக  ரகசிய தகவல கோயம்பேடு போலீசாருக்கு கிடைத்தது. இதனையடுத்து கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையில்  போலீசார் வாகன சோதனை தீவிரபடுத்தி வந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு கார் போலீசாரை பார்த்தும் வேகமாக தப்ப முயன்றனர். இதனை பார்த்த போலீசார் விரட்டி சென்று அந்த காரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். காரை சோதனை செய்த போது அதில் இரண்டு கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து காரில் வந்த 4 பேரை கைது செய்து கோயம்பேடு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் சென்னை வானகரம் பகுதியை சேர்ந்தவர் அவினாஷ்(26) .சென்னை தண்டையார்பேட்டை வி.ஒ.சி நகர் சேர்ந்தவர் கமல்(25) .சென்னை நெற்குன்றம் சீனிவாசன் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரித்திவிராஜ்(24) .சென்னை அரும்பாக்கம் துரை நகர் பகுதியை சேர்ந்தவர் பரத்குமார்(25) என்பது தெரியவந்தது.

மேலும் தொடர் விசாரணை செய்ததில் சென்னை சென்ட்ரல் பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபரிடமிருந்து கஞ்சா வாங்கிக்கொண்டு கல்லூரி மற்றும் சென்னை புறநகர் பகுதியில் செல்போன் மூலமாக கஞ்சா கேட்பவர்களுக்கு கஞ்சா பொட்டலங்கள்  விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

இவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக் பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து, 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து   சிறைச்சாலையில் அடைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here