திருத்தணி, ஜூன். 24 –

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி—சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கே.ஜி.கண்டிகை அரசினர் மேல்நிலைப் பள்ளி மேலும் இப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நண்பகல், பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அடித்த வாலிபால், மைதானத்தின் அருகே இருந்த அரச மரத்தில் பட்டது. அப்போது அம்மரத்தில் கூடுக்கட்டிருந்த தேனீக்கள் கூட்டமாக பறந்து வந்தது. அதனைக் கண்ட மாணவர்கள் மைதானத்தை விட்டு அலறியடித்துக்கொண்டு ஓடி, அவரவர் வகுப்பறைக்குள் சென்று கதவுகளை மூடி அமர்ந்துக் கொண்டனர்.

இந்நிலையில் மாணவர்களின் அலரல் சத்தம் கேட்டு விளையாட்டு மைதானத்திற்கு வந்த பள்ளி தலைமை ஆசிரியர் சாய்ஸ்ரீ, மற்றும் பெண் சமையல் பணியாளர் அன்னமேரி ஆகிய இருவரையும் தேனீக்கள் கொட்டியது அதனைத்தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்ட கல்வி அலுவலருக்கு இவ்விபத்துக் குறித்து தகவலளித்தார். உடனடியாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளியில் இருந்து அனைத்து மாணவர்களையும் அவரவர் வீட்டிற்கு பாதுக்காப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்விபத்தில் மாணவர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

தகவலறிந்து அப்பள்ளிக்கு தீயணைப்பு காவலர்கள் அரச மரத்தில் இருந்த தேன் கூட்டை வெகு நேரப் போராட்டிற்கு பின்பு அளித்தனர். அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 

தம்பட்டம் நாளேடு செய்திகளுக்காக திருவள்ளூர் செய்தியாளர் சாய் கிரண்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here