காஞ்சிபுரம், மே. 20 –

திமுகவின் இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்மன்ற உறுப்பினரும் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடித்து இன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தைக் காண மேளதாளங்கள் முழங்க அப்படத்தை வரவேற்று அதனைக்காண ரசிகர்கள் குவிந்தனர்.

தமிழகம் முழுவதும் இன்று  இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் இன்று பல்வேறு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக இன்று காஞ்சிபுரத்தில் வெளியாகி உள்ள நெஞ்சுக்கு நீதி திரைபடத்தை காண ஆராவரத்துடன் மேள தாளங்களுடன்  ஏராளமான ரசிகர்கள் திரையரங்கில் குவிந்து உள்ளனர்.

பின்னர், இளைஞரணி துணை அமைப்பாளர் யுவராஜ் ஏற்பாட்டில் திரைப்படத்தை காண வந்த கழக நிர்வாகிகள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சுமார் 1000 இருக்கைகள் கொண்ட திரையரங்கம் முழுவதும் நிரம்பி வழிவதால் திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திரைபடத்தை காண காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், மேயர் மகாலட்சுமி யுவராஜ் ,மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வருகை புரிந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here