தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை யொட்டி காஞ்சிபுரத்தில் 100க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்ற  ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி  கொடியசைத்து துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம், செப் . 4 –

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள்  திட்டத்தின் கீழ் வருடம் தோறும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடுவது வழக்கம். அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில்  ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ்    தேசிய ஊட்டச்சத்து மாத விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி தலைமையில் இன்று  கொண்டாடப்பட்டது. அதையொட்டி மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி  பாலூட்டும் தாய்மார்களுக்கு மரக்கன்றுகளை வழங்கியும், பிறந்த குழந்தைகளுக்கு  தாய்மார்கள் தாய்பால் வழங்குவதை உறுதி ஏற்கும்   கையெழுத்து இயக்கத்தை கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.

அதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  அங்கன்வாடி பணியாளர்கள்  பங்கேற்ற  ஊட்டச்சத்து குறித்த உறுதி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைவரும் உறுதி மொழி ஏற்றப்பின்னர் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் 100க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து முக்கிய வீதிகள் வழியாக தேரடி வரை ஊர்வலமாக சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்நிகழ்வில்  மாவட்ட திட்ட அலுவலர் சற்குணா, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அனுராதா,  வட்டார குழந்தை வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி உள்ளிட்ட அலுவலர்கள் , அங்கன்வாடி பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here