காஞ்சிபுரம் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை யொட்டி வைணவ திருக்கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய வந்த வெளிமாநில பக்தர்கள் கொரானா தடுப்பு நடவடிக்கைகளால் கோவில்கள் மூடப்பட்டிருந்ததால் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

காஞ்சிபுரம், செப் . 18 –

புரட்டாசி மாதம் தொடங்கிய நாள் முதல் வைணவ திருக்கோவில்களான பெருமாள் கோவில்களில் வெகு விமர்சையாக வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் 108 திவ்ய தேச வைணவ திருக்கோவில் களாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், வைகுண்ட பெருமாள் கோவில், உலகளந்த பெருமாள் கோவில், பாண்டவதூத பெருமாள் கோவில்,அழகிய சிங்க பெருமாள் கோவில், விளக்கொளி பெருமாள் கோவில், என 10 க்கும் மேற்பட்ட திவ்ய தேச திருக்கோவில்கள் உள்ளது.

புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை ஓட்டி காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து திவ்ய தேச பெருமாள் கோவில்களிலும் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பக்தர்கள் வணங்கி விட்டு செல்வது வழக்கம்.

கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து திருக்கோவில்களிலும் சாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு  புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து வைணவ திவ்யதேச திருக்கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் என நம்பி சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான வெளிமாநில பக்தர்கள் காஞ்சிபுரம் வருகை தந்த நிலையில், கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் கோபுரத்தை தரிசனம் செய்து விட்டு சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here