காஞ்சிபுரத்தில் பத்து நிமிட மழைக்கே சாலையில் தேங்கி நிற்க்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளானர்கள் .

காஞ்சிபுரம் , செப் . 25 –

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று தமிழக முதலமைச்சர்  தலைமையில் நடந்த அனைத்து துறை உயர் அலுவலர்களிடம் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் வட கிழக்கு பருவமழையினால் ஏற்படும் இடையூறுகளை எதிர் கொள்ள விரைந்து நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தியுள்ள நிலையில் இன்று பருவ மழையால் காஞ்சி புரத்தில் பெய்த பத்து நிமிட மழையால் சாலைகளில் குளம் போல் மழைநீர் தேங்கியிருந்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளானர்கள்.    

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை லேசான மழை பெய்தது. இந்த நிலையில் காஞ்சிபுரம் நகரில் பத்து பெய்த மழைக்கே விளக்கடிகோவில் தெருவில் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

 

இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற் குள்ளாகி யுள்ளனர் எனவே காஞ்சிபுரம் பெருநகராட்சி நிர்வாகம் சாலையில் தேங்கியுள்ள மழை நீரை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here