காஞ்சிபுரம், ஜூலை. 03 –
தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்று மீண்டும் பரவலாகி வருகின்றது. இதன் எதிரொலியாக தமிழக சுகாதாரதுறை அனைவரும் கட்டாய முகக்கவசம் அணிய உத்திரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கிருமிநாசினி பயன்டுத்த வேண்டும். திருமண மண்டபங்களில் 100-பேர்க்கு அதிகமாக பங்கேற்க்க கூடாது. குளிர்சாதனம் பயன்படுத்த கூடாது என பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக இன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முககவசம் அணிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதிகம் மக்கள் கூடும் பகுதியான காஞ்சிபுரம் நகரில் மூங்கில் மண்டபம், இரட்டை மண்டபம், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு முககவசத்தை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். முதல் கட்டமாக எச்சரிக்கை விடுத்து முககவசம் வழங்கி வருகின்றனர் அடுத்த கட்டமாக அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
அரசு பேருந்துகளில் பயணம் செய்த பொதுமக்கள் முககவசம் அணியாமல் இருந்தவர்களுக்கு மாவட்ட எஸ்.பி சுதாகர் முகக்கவசம் வழங்கினார். இந்த விழிப்புணர்வின் போது துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.