காஞ்சிபுரம், மார்ச். 20 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கலைச்செல்வி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற் கொண்டார்..

நாடாளுமன்ற தேர்தல் குறித்த தேதிகள் இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் பணியானது காஞ்சிபுரம் மாவட்டங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக பண பட்டுவாடாவினைத் தடுக்கும் விதமாக சிசிடிவிகள் கூடிய தேர்தல் வாகனங்களில், தேர்தல் அதிகாரிகள், காவல்துறையுடன் இணைந்து வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதுப்போன்று பதட்டமான வாக்கு சாவடிகள், அரசியல் கட்சியின் பிரச்சார வாகனங்கள் உள்ளிட்டவைகளை கண்காணிக்க உள்ளனர். இந்நிலையில் தேர்தல் அதிகாரிகள் செல்லக்கூடிய வாகனங்களை இணையத்தின் வாயிலாக அறிவதற்கும், மக்கள் புகார் கூறுவதற்கும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் தேர்தல் பறக்கும் படையினர் செல்லும் வாகனகளில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் மூலம் வாகனங்கள் எங்கு உள்ளது எவ்வழியாக சென்றுள்ளது என்று வரைபடம் மூலமாக கண்டறிந்து வாகனம் செல்லும் இடத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் கலைச்செல்விக் கேட்டறிந்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here