காஞ்சிபுரம், ஆக. 19 –
50 ஆண்டுகளாக விவசாயிகள் விவசாயம் செய்து வந்த நிலத்தை புஞ்சை அனாதீனம் நிலம் எனக் கூறி காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்ததால் விவசாயிகள் வேதனையோடு மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கச்சேரி கிராமத்தில் 300 – க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
மேலும், சுமார் 50 ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்நிலம் புஞ்சை அனாதீனம் நிலம் எனக் கூறி அறிவிப்பு பலகையினை வைத்துள்ளனர்.
இதுக்குறித்து அரசு அலுவலர்களிடம் விவசாயிகள் கேட்ட பொழுது அவர்கள் இந்த இடமானது அரசுக்கு சொந்தமான இடம் இந்த இடத்தில் இனி மேல் விவசாயம் செய்வதற்கு அனுமதி இல்லை என விவசாயிகளிடம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக விவசாயிகள் சுதந்திர தினம் அன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து அந்நிலத்தில் விவசாயம் செய்வதற்கும், மேலும் பட்டா வழங்கிட கோரியும் மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.
அக்கோரிக்கையை ஊராட்சி மன்ற நிர்வாகம் தீர்மானமாக நிறைவேற்றி, அவர்களது வாழ்வாதாரத்தை காத்திடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதே பகுதியை சேர்ந்த 50 – க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பட்டாவும் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் சில விவசாயிகளுக்கு பல ஆண்டுகளாக மனு அளித்து வந்தும் இதுவரை பட்டா வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர்.
எங்களது வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் தலையீடு செய்து நாங்கள் விவசாயம் செய்த நிலங்களில் மீண்டும் விவசாயம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
Formers land issue Story
petti
- Aarumugapillai
- Sargunammai
- Vasudevan
- Kadambanathan