காஞ்சிபுரம், டிச. 10 –
காஞ்சிபுரம் அடுத்த ஒலிமுகமது பேட்டை பகுதியில் அமைந்துள்ளது புதுநகர் அவின்யூ. காஞ்சிபுரம் ஒட்டி பெருநகர வளர்ச்சி அதிகம் உள்ள பகுதியாக இப்பகுதி குடியிருப்புவாசிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு புதிய கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ஜனார்த்தனன் என்பவர் புதிய 3 அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த சுமித்(வயது-47) என்பவர் புதிய வீட்டிற்கான இரும்பு கேட், மாடிப்படிகள் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வரும் இவர் கடந்த சில தினங்களுக்கு முன் இங்கு பணி ஒப்பந்தம் காரணமாக வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று பிற்பகல் மூன்றாவது மாடி அருகே எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணி மேற்கொண்டிருந்த போது மாடியிலிருந்து தவறி விழுந்துள்ளார். இதனையெடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108அவசர உதவிக்கு தெரிவித்த நிலையில் அங்கு வந்து அவர்கள் பரிசோதித்தபோது ஏற்கனவே சுமித் உயிரிழந்துள்ளது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து பாலுசெட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைபற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து வீட்டு உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.