திருவாரூர், மார்ச். 16 –
திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் நடைப்பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 319 பயனாளிகளுக்கு ரூ. 4 கோடியே 80 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து அங்கு நடைப்பெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது. அதில் அவர் திருவாரூர் மாவட்டத்தில் அரசு அறிவித்த நலத்திட்டங்கள் எந்த நிலையில் உள்ளதெனவும் மேலும் அத்திட்டங்களின் பணி எத்தனை சதவீதம் முடிவடைந்திருக்கிறது என்பது குறித்த ஆய்வுகூட்டம் 2 மணி நேரம் நடைபெற்றதுஎன்றார். தொடர்ந்து, அதிகாரிகள் அப்பணிகள் குறித்து விளக்கமளித்தனர். மீண்டும் அடுத்த மாதம் ஆய்வுகூட்டத்திற்கு தான் வருவேன் என அவர்களிடம் தெரிவித்தேன் என்றார். மேலும், மக்கள் பணி தொடரும் எனவும் அப்போது அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கும்போது, உடற்கல்வி பாடம் கட்டாயமாக்குவது குறித்து அதிகாரிகளிடம் கலந்தாலோசிக்க இருப்பதாகவும் அப்போது தெரிவித்தார். மேலும் உடற்கல்விக்கு 77 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவும், மேலும் பற்றாக்குறை இருப்பின் அவை சரிசெய்யப்படும். எனக்குறிப்பிட்ட அவர் தொகுதிக்கு ஒரு விளையாட்டு மைதானம் என்பதை ஒரே நாளில் செய்துவிட முடியாது. எனவும், இருப்பினும் அதற்கான முதற்கட்டமாக 10 தொகுதிகளை முதல்வர் விரைவில் அறிவிப்பார் எனவும், மேலும், திருவாரூர் தொகுதியின் தேவைக் குறித்து எம்எல்ஏ க்கள் மனு அளித்துள்ளனர். தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாட்டில் தற்போது காய்ச்சல் அதிகமாக பரவிக்கொண்டுள்ளதா என்பதுக் குறித்து பள்ளிக்கல்வித்துறை, மருத்துவத்துறை அமைச்சர்களிடம்தான் அதுப்பற்றிக் கேட்க வேண்டும் என உதயநிதி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன், தாட்கோ தலைவர் மதிவாணன் ,தமிழக டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ கே எஸ் விஜயன் சட்ட மன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
பேட்டி உதயநிதிஸ்டாலின்