சென்னை, மார்ச். 16 –
முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வருமானத்திற்கு அதிகமாக 12 பேர்களுடன் சேர்ந்து கூட்டுச்சதியில் ஈடுப்பட்டு ரூ.58 கோடியே 23 இலட்சத்து 97 ஆயிரத்து ஐம்பத்தி இரண்டு ரூபாய் அளவுக்கு கடந்த 2016 முதல் 2021 வரை சொத்து சேர்த்ததாக 12 பேர்கள் மீது கோவை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினரால் குற்றப்பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட்டு அதன் மீது விசாரணை நடைப்பெற்று வருகிறது.
இவ் வழக்கின் தொடர்ச்சியாக இவ்வழக்கிற்கு சம்பந்தமான மற்றும் தொடர்புடை ஆவணங்கள் இருப்பதாக சந்தேகப்படும் 59 இடங்களில் நேற்று மார்ச் 15 ஆம் தேதியன்று சோதனை தொடங்கப்பட்டு நடைப்பெற்று வருகிறது. மேற்படி நேற்று நடத்திய சோதனையில் 11.153 கி.கிராம் தங்க நகைகள், 118. 506 கி.கிராம் வெள்ளி, மற்றும் ஆவணங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டும், கணக்கில் வராதப் பணம் ரூ.84 லட்சம், சான்று பொருட்களான கைப்பேசிகள், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடிகணினி, கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டன. மேலும் சுமார் ரூ. 34 லட்சம் அளவுக்கு பலதரப்பட்ட கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்திருப்பதும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் அன்பரசன், ஹேமலதா, சந்திரசேகர், சந்திரபிரகாஷ், கிருஷ்ணவேணி, சுந்தரி, கார்த்திக், விஷ்ணுவரதன், சரவணகுமார், ஸ்ரீமகா கணபதி ஜூவல்லர்ஸ், கான்ஸ்ட்ராமால் குட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஆலம் கோல்டு மற்றும் டயமண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்
நேற்று சோதனை நடைப்பெற்ற 59 இடங்கள் கோயம்புத்தூர் – 42, திருப்பூர் – 2, சேலம் – 4, நாமக்கல் – 1, கிருஷ்ணகிரி – 1, திருப்பத்தூர் – 1, சென்னை – 7 மற்றும் கேரளா நாநிலம் ஆணைகட்டி உள்ளிட்ட 59 இடங்களில் சோதனைகள் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினரால் நடத்தப்பட்டு வருகிறது.