பொன்னேரி, பிப். 27 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சிப் பகுதியில் வசிக்கும் 47 பழங்குடியின மக்களுக்கு, தனியார் டிரஸ்ட் மூலம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி அவ்வூராட்சிக்குட்பட்ட சுனாமி நகர் பகுதியில் இன்று நடைபெற்றது.
இவ்விழாவிற்கு அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவில் தலைமை வகித்தார். மேலும் இவ்வூராட்சி மன்ற துணைத் தலைவர் எம்.டி. ஜி.கதிர்வேல் இவ்விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார்.
மேலும் இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர், பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன், வட்டாட்சியர் செல்வக்குமார், மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ரவி. உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
மேலும் அப்பகுதியில் வசித்து வரும் 100 குடும்பங்களை சேர்ந்த 47 பழங்குடியின பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவை அவர்கள் வழங்கினார்கள்.
மேலும் அதனைத்தொடர்ந்து, ஊராட்சியின் சார்பில் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடும் வகையில், அம்மக்களுக்கு வங்கிகள் மூலம் தொழில் முனைவோருக்கான கடன் வழங்கப்பட்டது. ஊராட்சியின் சொந்த நிதியிலிருந்து முதியவருக்கு ஆடுகளும். இளைஞர்களுக்கு விளையாட்டுத் திறன் மேம்பட உபகரணங்களும் வழங்கப்பட்டன.
மேலும், இதில் அருணோத டிரஸ்ட் தலைவர் வர்ஜி மேரி துரைசாமி, ஊராட்சி செயலர் பொற்கொடி, அத்திப்பட்டு ரவி, வார்டு உறுப்பினர் கோமதிநாயகம், அத்திப்பட்டு புருஷோத்தமன் உள்ளிட்டவர்களும் மேலும் அப்பகுதியில் வசிக்கும் திரளான பொதுமக்களும் இவ்விழவில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.























