காஞ்சிபுரம், மார்ச் .09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்ததை தொடர்ந்து காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் சட்டசபையில் காஞ்சிபுரத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இணை ஆணையர் மற்றும் புதிய கட்டிடம் வேண்டும் என்கின்ற கோரிக்கையை வலியுறுத்தியதை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்டசபையில் ஒப்புதல் அளித்தார்.
அதன் பேரில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் மூன்று கோடி மதிப்பிலான கட்டிடப் பணி துவக்கப்படும் என அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின்பு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது. அதில் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் கலந்துக் கொண்டு புதிய கட்டிடம் கட்டும் பணியை தொடங்க அடிக்கல் நாட்டி கூடியிருந்த பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
மேலும் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் பேசுகையில் பல காலமாகவே காஞ்சிபுரத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இணை ஆணையர் இல்லாமலும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இந்து சமய அறநிலையத்துறைக்கு என தனியாக அலுவலகம் இல்லை என்பதாலும் சட்டசபையில் கோரிக்கை வைத்ததின் பேரில் காஞ்சிபுரத்தில் இணை ஆணையர் இல்லாததால் இந்து சமய அறநிலைத்துறையில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் பக்கத்தில் உள்ள மாவட்டங்களுக்கு சென்று தீர்வினை பெற்ற நிலையில் காஞ்சிபுரத்திற்கு என தனியான இணை ஆணையர் மற்றும் இணை ஆணையர் கட்டிடம் அமைத்து தரவேண்டும் என சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்ததின் பேரில் அப்பணிக்கான ரூபாய் 3 கோடி திட்ட மதிப்பீட்டில் தொடங்கப் பட்டுள்ளதை பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அந்நிகழ்ச்சியில் இணை ஆணையர் வான்மதி, மாவட்ட அறங்காவல் குழு தலைவர் S T தியாகராஜன், காஞ்சிபுரம் மாநகர திமுக செயலாளர் சி கே வி தமிழ்ச்செல்வன், முருகர் கோயில் செயல் அலுவலர் தியாகராஜன், ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், அறநிலையத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.