கும்பகோணம், ஆக. 16 –

வீரத்துறவி என போற்றப்படும் சுவாமி விவேகானந்தர் கும்பகோணம் மாநகருக்கு  125 ஆண்டுகளுக்கு முன்பு வருகை தந்து அவர் உரை நிகழ்த்திய போர்டர் டவுன் ஹால் எனும் இடத்தில், அவர் நினைவைப்போற்றும் வகையில், அங்கு அவருக்கு நாட்டின் 75 வது சுதந்திர தின நிறைவில் 7 அடி உயர முழுவுருவ வெண்கலச்சிலை திறப்பு விழா நேற்றிரவு நடைப்பெற்றது. அச்சிலையினை புதுச்சேரி ராமகிருஷ்ண‌ மடத்தின்  மூத்த துறவி ஸ்ரீமத் சுவாமி ஆத்ம கனா னந்தர் திறந்து வைத்தார்.

வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் மேலை நாடுகள் பலவற்றில், பாரத பாரம்பரிய பெருமைகளை நிலைநாட்டிய பின்னர் ராமேஸ்வரம் வந்தடைந்து நாடு திரும்பியதும், அங்கிருந்து ரயில் மூலம் கும்பகோணம் வந்த அவர், 1897ம் ஆண்டு பிப்ரவரி 3, 4 மற்றும் 5ம் தேதி ஆகிய 3 நாட்கள் இங்கேயே தங்கியிருந்து போர்ட்டர் டவுன் ஹாலில், வேதாந்த பணி எனும் தலைப்பில் உரையாற்றிய போது  தான் விடுதலை போராட்டத்திற்கும், விடுதலைக்கு பிறகு நாட்டை கட்டமைப்பதற்குமான பல்வேறு வழிகாட்டுதல்கள் அமைந்திருந்தது குறிப்பாக அவரது எழுந்திருங்கள், விழித்துக் கொள்ளுங்கள், லட்சியத்தை அடையும் வரை ஓயாது செல்லுங்கள் என்ற வரிகள் கும்பகோணத்தில் முழங்கப்பட்டவையாகும், எனவே சுவாமிகள் வருகையின் 125வது ஆண்டில், அவர் உரையாற்றிய இடத்தில், நாட்டின் 75வது (பவள விழா) சுதந்திர தினம் கொண்டாடும் வேளையில் அவரை போற்றி பெருமைபடுத்தும் வகையில் 7 அடி உயர வெண்கல சிலை அமைக்க திட்டமிட்டு அச்சிலை திறப்பு சுதந்திர தினமான நேற்றிரவு ,

கும்பகோணம் எம்எல்ஏ க அன்பழகன் தலைமையில் நடைபெற்ற விழாவில், நீதிபதி சத்தியமூர்த்தி அனைவரையும் வரவேற்க, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன், சேலம் ராமகிருஷ்ண மட செயலர் சுவாமி யதாத் மானந்தர், தஞ்சை மட அத்யக்ஷர் சுவாமி விமூர்த்தா னந்தர், சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குநர் என் காமகோடி ஆகியோர் முன்னிலையில் புதுச்சேரி ராமகிருஷ்ண‌ மடத்தின் மூத்த துறவி ஸ்ரீமத் சுவாமி ஆத்ம கனானந்தர் சிலையினை திறந்து வைக்க, விவேகானந்தர் திருவுருச்சிலைக்கு மலர்கள் தூவியும் மங்கல ஆர்த்தி செய்தும் வழிபாடு நடைபெற்றது.

தொடர்ந்து விழாவிற்கான கல்வெட்டினை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதியரசர் ஜி ஆர் சுவாமிநாதன் திறக்க, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தலைவரின் படத்தை சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குனர் என் காமகோடி திறந்து வைத்தார்

முன்னதாக கும்பகோணம் மகாமக குளத்தில் இருந்து சுவாமி விவேகானந்தர் விஜய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக போர்ட்டர் டவுன் ஹாலை வந்தடைந்தது.

இதில் தேசிய கொடியுடன் யானை முன் செல்ல தொடர்ந்து ஒட்டகம், நாட்டிய குதிரைகள், சிலம்பாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், பேண்ட் வாத்தியம், கேரள ஜெண்டை மேளம், தமிழர்கள் கலை கலாச்சாரத்தையும் வீர விளையாட்டுகளையும் கண்முன்னே கொண்டு வரும் வகையில் பல விதமான வீரவிளையாட்டுகளை நிகழ்த்தி காட்ட, பள்ளி மாணவ மாணவிகள் ‌ பரதநாட்டியம் ஆடி அசத்தினர், ஏராளமான குழந்தைகள், விவேகானந்தர் வேடம் அணிந்து ஊர்வலமாக வந்தனர் அவர்களுடன் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் என்எஸ்எஸ், என்சிசி, சாரணர் என பலரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here